ரஜினியும், மோடியும் ஒண்ணு!

ரஜினியும் மோடியும் ஒன்று சேர்ந்தால் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கலாம் என்றும் தற்போது தமிழ்நாட்டில் உள்ள வெற்றிடத்தை நடிகர் ரஜினிகாந்த்தால் மட்டுமே நிரப்ப முடியும் என்றும் துக்ளக்  இதழின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
துக்ளக் இதழின் ஆசிரியரும், தமிழகத்தில் பாஜக நிழல் ஆட்சி நடத்துவதற்கு பெரும் துணையாக இருப்பவர் ஆடிட்டர் குருமூர்த்தி என பரவலாக பேசப்பட்டு வருகிறது. இவர் நடிகர் ரஜினிகாந்துக்கு 25 ஆண்டு கால நண்பர. இதை ரஜினியே தனது பேட்டியின்போது தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் தொடங்கப் போகும் புதிய கட்சிக்கு குருமூர்த்திதான் ஆலோசகர் என்றும் அவரது ஆலோசனையின்படியே நடிகர் ரஜினிகாந்த் செயல்பட்டு வருகிறார் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் 'பிக்கி' அமைப்பு சார்பாக நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் ஆடிட்டர் குருமூர்த்தி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக அரசுக்கு செயல்பாடு ஒன்று இருப்பது போல் தெரியவில்லை என குற்றம்சாட்டினார்.
நீட் தேர்வு குறித்து முழுபுரிதல் யாருக்கும் இல்லை என்பதால்தான் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. ரஜினிக்கு நான் ஆலோசகராக உள்ளேன் என்று கூறப்படுவது உண்மையாக இருந்தால்  அது எனக்குப் பெருமைதான் என்று குருமூர்த்தி தெரிவித்தார்..
தமிழகத்தில் உள்ள வெற்றிடத்தை ரஜினிகாந்த் நிரப்புவார் என நம்புகிறேன். ரஜினியும் மோடியும் ஒன்று சேர்ந்தால் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கலாம். கர்நாடக தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என நம்புகிறேன் என அவர் கூறினார்.
காவிரி பிரச்னையில் வேறு சிந்தனையுடைய கர்நாடகா, கேரளா பேசி முடிவுக்கு வர வேண்டும். கர்நாடக தேர்தலை கருதி காவிரி திட்டவரைவை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் அவகாசம் வழங்கியது நல்லது என்றும் ஆடிட்டர் குருமூர்த்தி  கூறினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.