களத்தில் குதித்த "அங்காடி மகேஷ்"..!

அங்காடிதெரு மகேஷ் -  ஷாலு  நடிக்கும் “ என் காதலி சீன் போடுறா “ என்ற படத்திற்கான பூஜை  சமீபத்தில் நடைப்பெற்றது. இந்த படத்தை  ராம்ஷேவா இயக்குகிறார்.
சங்கர் மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக ஜோசப் பேபி தயாரிக்கும் படத்திற்கு “ என் காதலி சீன் போடுறா “ என்று வித்தியாசமாக தலைப்பு வைத்துள்ளனர்.
இந்த படத்தில் அங்காடிதெரு மகேஷ்  நாயகனாக  நடிக்க, நாயகியாக ஷாலு என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். இவர்களுடன் ஆடுகளம் நரேன், மனோபாலா, விஜய் டிவி.கோகுல், டாக்டர் சரவணன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
அங்காடி தெரு படம்  மூலம் எல்லோராலும் கவனிக்கப்பட்டவர்தான் ஹீரோ மகேஷ். இவருடைய இயற்பெயர் மோகன் என்றாலும், அங்காடி மகேஷ் என்றால் தான் அனைவருக்குமே தெரியும்.
அங்காடி தெரு படத்திற்கு  பின், இரவும் பகலும், புத்தனின் சிரிப்பு, யாசகன் ,வேல்முருகன் போர்வேல்  உள்ளிட்ட  பல படங்களில் அங்காடி மகேஷ் நடித்துள்ளார் 
இதில் நடித்த அங்காடி தெரு போன்று, மற்ற படங்கள் கை கொடுக்க வில்லை என்றாலும், இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என நம்பிக்கை தெரிவித்து உள்ளார் மகேஷ்
மேலும், தற்போது கைவசமாக வீராபுரம் என்ற படத்தையும்,கருப்பு ஆடு என்ற படமும்  வைத்துள்ளார்.
ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு, மீண்டும் களத்தில் குதித்து உள்ளார் அங்காடி மகேஷ். 
படம் பற்றி இயக்குனர் ராம்சேவா கூறியதாவது ...
இன்றைய சமூகத்தில் எல்லோருமே புத்திசாலிகள் தான் ஆனால் அவர்களை சாமார்த்தியமாக ஏமாற்றத் தெரிந்த அது புத்திசாலிகளும் அவர்களுக்குள்ளேயே கலந்து இருப்பதும் உண்மையே.
இப்படி நடந்த உண்மை சம்பவங்களை மையப்படுத்தி கதை உருவாக்கப் பட்டுள்ளது.
இந்தப் படத்திற்கு பிறகு எந்த குடும்பத்தை சேர்ந்தவர்களும் ஏமாறாமல் இருந்தால் நாங்கள் எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைத்ததாக மகிழ்வோம்.
படப்பிடிப்பு சென்னை,பாண்டி, பொள்ளாச்சி, ஆனமலை போன்ற இடங்களில் தொடர்ந்து நடைபெற உள்ளது. என்றார் இயக்குனர்.
Powered by Blogger.