எஞ்சி உள்ள ஒரு குழந்தையை காப்பாற்ற உதவி கோரும் பெற்றோர்!

வவுனியாவில் இருதய மாற்று சிகிச்சைக்கு உதவிகோரியிருந்த இரண்டு சகோதரிகளில் தனிஸ்கா என்ற எட்டு வயதுச் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் வசித்து வரும் தனிஸ்கா என்ற எட்டு வயதுச் சிறுமிக்கும் சரணிக்கா என்ற ஏழு வயதுச் சிறுமிக்கும் உடனடியாக இருதய மாற்று சிகிச்சைக்கு இருதயம் தேவைப்பட்டுள்ளது.
இவர்களின் பெற்றோர் ஏற்கனவே தமது மகன் ஒருவரை கடந்த 2013ம் ஆண்டு இதே வருத்தத்தால் பாதிக்கப்பட்டு, அவரது ஏழாவது வயதில் இழந்து தவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது அவர்களது அடுத்த இரண்டு பெண் குழந்தைகளுக்கும் அவருக்கு இருந்த அதே இருதய வருத்தம் காரணமாக [Familial Dilated Cardiomyopathy with moderate to severely reduced LV Function] அவசரமாக இருதய மாற்று சிகிச்சை செய்யவேண்டியிருந்துள்ளது. இந்த நிலையில் தனிஸ்கா என்ற சிறுமி நேற்று (22.05.2018) மரணமாகியுள்ளார்.
தொடர் உயிரிழப்பைச் சந்தித்துவந்த குடும்பத்தில் எஞ்சியுள்ள மற்றொரு சிறுமியையாவது காப்பாற்ற உதவி செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.
குறித்த சிறுமிக்கு இதய மாற்று முறையே சரியான தீர்வு என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். சாதாரணமாக ஒரு மனிதன் உயிர் வாழ 65 வீதத்துக்கு மேல் இதயத்தின் செயற்பாடு காணப்பட வேண்டும். ஆனால் அவர்களது இரண்டாவது குழந்தைக்கு 10 வீதமாகவும் மூன்றாவது குழந்தைக்கு 25% மாகவும் காணப்படுகிறது. (பத்து வீதம் காணப்பட்ட சிறுமியே இன்று மரணமானார்)
எனவே கருணை உள்ளம் கொண்ட மனிதர்கள் இருப்பின், இருதயம் பெறக்கூடிய வழிமுறைகள், இருதயம் பெறும் முறைகள் தெரிந்தவர்கள் உதவ முன்வரவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
மேலதிக தொடர்புகளுக்கு,
0094772101377, 0094779620509 என்ற தொலைபேசி இலக்கங்களையும் shanuyadevi@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியையும் அணுகமுடியும்.
Powered by Blogger.