மைதானத்தில் மகளுடன் மண்டியிட்டு விளையாடிய டோனி!

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் அணிக்கதிரான போட்டியில்
சென்னை அணி 5 விக்கட்டுகள் அபார வெற்றிபெற்றது.இந்த போட்டியிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டோனி, தனது ஷ்டைலில் போட்டியை சிக்ஸருடன் முடிவுக்கு கொண்டு வந்தார்.இந்நிலையில், இந்த போட்டிக்கு பின்னர் டோனி தனது மகள் ஷிவாவுடன், மைதானத்தில் விளையாடிய காணொளி தற்போது வைரலாகி வருகின்றது.

போட்டிக்கு பின்னர் சென்னை அணி வீரர்களுடன் மைதானத்தில் டோனி நின்றுக்கொண்டிருந்தார். இதன்போது அங்கு சென்ற ஷிவா டோனியை முட்டிப்போட வைத்து அவருடைய தொப்பியை எடுத்து விளையாடினார். குறிப்பிட்ட இந்த காணொளி தற்போது வைரலாகியுள்ளது.
Powered by Blogger.