முள்ளிவாய்க்கால் நினைவேந்தலால் தனியார் வங்கி முகாமையாளர் இடைநீக்கம்!

கடந்த 18ஆம் திகதி கிளையில் நினைவேந்தல் நடத்தப்பட்டுள்ளது. அவை தொடர்பான ஒளிப்படங்கள் வெளியானதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகின்றது.

பிரபல தனியார் வங்கி ஒன்றின் கிளிநொச்சிக் கிளையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடத்தப்பட்டமைக்காக அந்தக் கிளையின் முகாமையாளரும், உத்தியோகத்தர் ஒருவரும் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 18ஆம் திகதி கிளையில் நினைவேந்தல் நடத்தப்பட்டுள்ளது. அவை தொடர்பான ஒளிப்படங்கள் வெளியானதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகின்றது.

அந்த வங்கிளின் தலைமையகத்தில் இருந்து வந்த அதிகாரிகள் கிளை முகாமையாளரை விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.  போரில் இறந்த உறவுகளை நினைவு கூருவது அவர்களின் உரிமை என்று முகாமையாளர் உயர் அதிகாரிகளுக்கு எடுத்துக் கூறியுள்ளார். எனினும் விடுதலைப் புலிகளை நினைவுகூர்ந்து கிளை பணிமனையில் சுடர் ஏற்றியது தேசத்துக்கு விரோதமானது என்று உயர் அதிகாரிகள் பிடிவாதமாக இருந்தனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Powered by Blogger.