சாமி படத்தில் திருநெல்வேலி அல்வாடா..!

சாமி ஸ்கொயர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும்
நிலையில், சாமி படத்தில் இடம்பெற்ற திருநெல்வேலி அல்வாடா பாடலைப் போல இந்த பாகத்தில் டர்ர்ர்ரனக்கா என்ற பாடல் உருவாகுவதாக கூறப்படுகிறது.

சாமி 2 படத்துக்காக திருநெல்வேலியின் முக்கிய பகுதிகள் காரைக்குடியில் செட் போட்டு படம் பிடிக்கப்படுகிறது.சாமி படத்தின் தொடர்ச்சியாக சாமி-2 படம் உருவாகி வருகிறது. சாமி படத்தின் தொடக்க பாடலான திருநெல்வேலி அல்வாடா பாடல் பிரபலமான ஒன்று. இந்த பாடல் திருநெல்வேலியின் முக்கிய பகுதிகளில் நடப்பதாக இருக்கும். ஆனால் திருநெல்வேலியில் எடுக்கப்படவில்லை. உண்மையில் காரைக்குடியில் செட் போட்டுதான் படம் பிடித்தார்கள்.இப்போது இரண்டாம் பாகத்துக்கும் அதே காரைக்குடியில் அதே திருநெல்வேலி பகுதிகளை செட் போட்டு எடுத்து இருக்கிறார்கள். ’டர்ர்ர்ரனக்கா…டர்ர்ர்ரனக்கா…’ என்று தொடங்கும் பாடல் முந்தைய பாக பாடலை விட பெரிய ஹிட் அடிக்கும் என்கிறது படக்குழு.

சாமி-2 படத்தில் முந்தைய பாகத்தில் நடித்த திரிஷா தவிர அனைவருமே நடிக்கிறார்கள். கீர்த்தி சுரேஷும், சூரியும் புது வரவுகள். த்ரிஷா நடிப்பார் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார் இயக்குநர் ஹரி. ஆனால் திரிஷா இன்னும் அதனை உறுதிப்படுத்தவில்லை.
Powered by Blogger.