பேருந்து ஊழியர்கள் நாளை கிளிநொச்சியில் சேவைப் புறக்கணிப்பு!

கிளிநொச்சி பேரூந்து உரிமையாளர்கள் பாதிப்படையும் வகையில்
வட மாகாண போக்குவரத்து அதிகார சபையால் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த சேவைப் புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்தில் நாளை அனைத்துப் பேருந்து ஊழியர்களும் சேவைப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர் என்று மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் நா.நகுலராஜா தெரிவித்துள்ளார்.

 கிளிநொச்சி பேரூந்து உரிமையாளர்கள் பாதிப்படையும் வகையில் வட மாகாண போக்குவரத்து அதிகார சபையால் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த சேவைப் புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

 வவுனியாவிலிருந்து கிளிநொச்சி வலைப்பாட்டு கிராமத்திற்கு வவுனியா ,  மாங்குளம் , மல்லாவி ஊடாக பேருந்து சேவை ஒன்றுக்கு அனுமதி வழங்கியமை மற்றும் வவுனியா மாங்குளம் கிளிநொச்சி ஊடாக பூநகரிக்கும் ஒரு பேரூந்து சேவைக்கான அனுமதியை வீதி போக்குவரத்து அதிகார சபையின் பொது முகாமையாளர் வழங்கியுள்ளார் .

No comments

Powered by Blogger.