தமிழில் வெளியாகும் அனுமனும் மயில்ராவணனும்!

கிரீன் கோல்டு அனிமேஷன் குழுமம் சார்பில் ‘அனுமனும்
மயில்ராவணனும்’ என்ற அனிமேஷன் படம் ஒன்று தமிழில் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #HanumanvsMahiravana
கிரீன் கோல்டு அனிமேஷன் குழுமம் வழங்கும் ஒரு புதிய குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் ‘அனுமனும் மயில்ராவணனும்’.
இந்திய மக்களின் மனம்கவர்ந்த கார்ட்டூன் நிகழ்ச்சியான சோட்டா பீம்-ஐ உருவாக்கிய கிரீன் கோல்டு அனிமேஷன், அடுத்ததாக `அனுமனும் மயில்ராவணனும்’ என்ற பெயரிலான அவர்களது புதிய குடும்ப பொழுதுபோக்கு திரைப்படத்தை வெளியிட இருக்கிறது. இராமாயண இதிகாசத்திலிருந்து ஹனுமான் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு இதுவரை சொல்லப்படாத ஒரு கதையின் அடிப்படையில் ஒரு புராண திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இராவணனின் சகோதரனும், தீய குணம் கொண்ட சூனியக்காரனும், பாதாள உலகில் மன்னனுமான மஹிரவனாவின் பிடியிலிருந்து   இராமனையும், இலட்சுமணனையும் காப்பாற்ற ஹனுமான் எடுக்கின்ற, பரபரப்புமிக்க, அதிசயிக்கச் செய்கிற கதையினை படமாக   உருவாக்கி இருக்கிறார்கள். 
இந்த படத்தை வருகிற ஜூன் 22-ஆம் தேதியன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. 
கிரீன் கோல்டு அனிமேஷன் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலரும், நிறுவனருமான திரு. ராஜீவ் சிலாகா படம் குறித்து பேசுகையில், ‘இத்திரைப்பட வெளியீடு குறித்து நாங்கள் மிகுந்த உற்சாகமும், மகிழ்ச்சியும் கொண்டிருக்கிறோம். ஒரு குடும்ப  பொழுதுபோக்கு சித்திரமாக இத்திரைப்படம் படைக்கப்பட்டிருக்கிறது. அனைத்து உணர்வுகளையும், கேளிக்கை, நகைச்சுவையையும்  மற்றும் அதிரடி சண்டைக்காட்சிகளையும் இது கொண்டிருக்கும். இராமாயண இதிகாசத்திலிருந்து இதுவரை சொல்லப்படாத ஒரு  கதையை பார்வையாளர்களுக்கு வழங்குவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்,” என்று கூறினார். 
Powered by Blogger.