கனடாவில் தூத்துக்குடி மக்கள் படுகொலைக்கு எதிரான கண்டன போராட்டம்!தூத்துக்குடி மண்ணில் எம் தமிழ் உறவுகள் மேல் இந்திய காவல் 
துறையினர் நிகழ்த்திய தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் மீதான தாக்குதலை கண்டித்தும் மக்களுக்கு ஊறு விளைவிக்கும் மக்கள் விரும்பாத ஸ்டெர்லைட் ஆலைகளை மூட கோரியும் கனடிய மண்ணில் இந்திய துணை தூதரகத்திற்கு முன்பாக கனடா வாழ் தமிழ் மக்கள் அனைவரும் அனைத்து பிரிவினைகளும் வேறுபாடுகளும் களைந்து ஒற்றுமையாக ஓரணியில் எதிர்ப்பு போராட்டம் ஒன்றை நிகழ்த்த அன்போடு அழைக்கப்படுகின்றீர்கள்.
கனடா தமிழ் சமூகம் ஒழுங்கமைத்துள்ள இந்த போராட்டத்தில் பங்கேற்க அனைத்து தமிழர்களும் ஓரணியில் பேரணியாக அணி திரண்டு வாரீர்.
இதுவரையில் தமிழக உறவுகளும் ஈழத்தின் மலையக உறவுகளும் தமது ஆதரவை நல்கி உள்ளார்கள்.
உங்கள் ஆதரவை நல்கும் அனுசரணையை வேண்டி நிற்கின்றார்கள் கனடா வாழ் தமிழ் உறவுகள்.
உறவுகளே அடுத்தவர்க்கு அநீதி நிகழ்கையில் நமக்கென்ன என இருக்கும் பாங்கினால் தான் ஆதிக்க சக்திகள் அநீதிகளை மக்கள் மேல் கட்டவிழ்க்கின்றன.
நீதிக்காக மாந்த நேயம் கொண்ட மக்கள் மக்களுக்காக போராட அணி திரள்வது மனித நேயம் போற்றும் ஒவ்வொரு மக்களதும் கடன்!
உயிர் விதைக்கப்பட்ட அப்பாவி மக்களின் உயிர் விலைக்கு நீதி கேட்க அனைவரும் வாரீர்!
இடம்: இந்திய துணை தூதரகத்திற்கு முன்பாக
முகவரி: 365 Bloor வீதிக்கு அருகில்
காலம்: வெள்ளிக்கிழமை, மே 25, 2018
நேரம்: பி.ப. 3:00 - 6:00 மணி
தொடர்புகளுக்கு: 647-535-9867
Powered by Blogger.