மாணவிகளுடன் தகாத முறையில் நடந்து கொண்ட ஆசிரியர் கைது!

யாழ்.வலிகாமம் வடக்கு பகுதியில் பிரபல பாடசாலை ஆசிரியர்
ஒருவர் பாடசாலை  மாணவிகளுடன் கடந்த 6 மாதங்களாக மாணவிகளுடன் தகாத முறையில் நடந்து கொண்டதாக குற்றஞ் சுமத்தப்பட்ட நிலையில் குறித்த ஆசிரியரை தெல்லிப்பழை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் பொலிஸ் வட்­டா­ரங்­கள் தெரி­வித்­த­தா­வது,

கொழும்­பி­லுள்ள தேசிய சிறு­வர் பாது­காப்பு அதி­கார சபைக்கு பெற்­றோர் சிலர் முறைப்­பாடு செய்­துள்­ள­னர். அதற்கு அமை­வாக, எமக்கு முறைப்­பாடு கிடைக்­கப் பெற்­றது. இது தொடர்­பில் நாம் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­தோம்.

பாதிக்­கப்­பட்ட மாண­வி­கள் 8 பேரி­டம் இது­வரை வாக்­கு­மூ­லம் பதிவு செய்­துள்­ளோம். சம்­பந்­தப்­பட்ட ஆசி­ரி­ய­ரைக் கைது செய்­துள்­ளோம் என்று குறிப்­பிட்­ட­னர்.

‘கடந்த 6 மாத கால­மாக எமது பிள்­ளை­க­ளு­டன் மேற்­படி ஆசி­ரி­யர் தவ­றான நோக்­கு­டன் சேட்­டை­விட்டு வந்­துள்­ளார். மேல­திக வகுப்பு என்று கூறி பிள்­ளை­களை அழைத்து அவர்­க­ளு­டன் தவ­றாக நடக்க முற்­பட்­டுள்­ளார்.

மாண­வி­களை தனி அறைக்கு அழைத்­துச் சென்று அவர்­களை தவ­றான வழி­யில் நடத்த முற்­பட்­டுள்­ளார். இந்த விட­யங்­களை வெளி­யில் யாரி­ட­மும் கூற­வேண்­டாம் என்று அச்­சு­றுத்­தி­யுள்­ளார்.

இத­னால் நீண்ட காலத்­தின் பின்­னரே பிள்­ளை­கள் எமக்­குத் தெரி­வித்­த­னர். நாம் அதி­ப­ரி­டம் தெரி­வித்­தோம். அவர்­கள் விட­யத்தை மூடி மறைக்க முற்­பட்­ட­மை­யி­னால், தேசிய சிறு­வர் பாது­காப்பு அதி­கார சபை­யி­டம் முறை­யிட்­டோம்’ என்று கூறி­னர். 
Powered by Blogger.