தென் மாகாணத்திற்கு விஷேட வைத்தியர்கள் குழு

தென் மாகாணத்தில் பல பகுதிகளில் பரவுகின்ற வைரஸ் காய்ச்சல் மற்றும் நோயாளர்களை கண்காணிப்பு செய்வதற்காக நேற்றைய தினம் விஷேட வைத்தியர்கள் குழுவொன்று அந்தப் பிரதேசங்களுக்கு சென்றுள்ளது. 

முன்னதாக தொற்று நோய்ப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் அனில் திசாநாயக்கவின் தலைமையில் அங்கு சென்ற விஷேட வைத்தியர்கள் குழுவினர் இந்த வைரஸ் தொற்று சம்பந்தமாக பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர். 

தென் மாகாணத்தில் பல பகுதிகளில் தற்போது பரவிவரும் இன்புளுவன்ஸா வைரஸ் தொற்று சம்பந்தமாக தேடிப்பார்ப்பதற்கு தொற்று நோய்ப் பிரிவின் விஷேட வைத்தியர்கள் குழுவொன்றை தென் மாகாணத்துக்கு அனுப்புமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவால் சுகாதாரப் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் அனில் ஜயசிங்கவிற்கு வழங்கப்பட்ட ஆலோசனைப்படி இந்தக் குழுக்கள் அங்கு சென்றுள்ளது. 

இதேவேளை வைரஸ் காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்துவதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமாக சுகாதாரப் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் சுகாதார அமைச்சில் விஷேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது. 

இதன்போது தென் மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளுக்கு தேவையான மருந்து வகைகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.