யாழ்.கோப்பாய்ச் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!

யாழ்.கோப்பாய்ச் சந்தியில் இன்று வியாழக்கிழமை(24) காலை
இடம்பெற்ற விபத்தில் முதியவரொருவர் உயிரிழந்துள்ளார்.

கோப்பாய்ச் சந்தியின் ஊடாக யாழ். நகர் நோக்கி மோட்டார்ச் சைக்கிளில் சென்று கொண்டிருந்த முதியவரைப் பின்தொடர்ந்து வந்த கன்ரர் வாகனம் மோதியமையால் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

குறித்த விபத்தில் படுகாயமடைந்த முதியவர் கோப்பாய் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

கோண்டாவிலைச் சேர்ந்த 62 வயது முதியவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். மேற்படி சம்பவம் தொடர்பாக கோப்பாய்ப் பொலிஸார் விசாரணைகள் ஆரம்பித்துள்ளனர். 
Powered by Blogger.