சீ.சீ.ரி.வி கமராவில் சிக்கிய திருடன் யாழ்ப்பாணத்தில் சம்பவம்!

யாழ்ப்பாணம் பரமேஸ்வராச் சந்தியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் நேற்று இரவு 7.45 மணியளவில் எரிவாயு சிலிண்டரை திருடிச் சென்ற நபர் சீ.சீ.ரி.வி கமராவில் அகப்பட்டுக் கொண்டார்.

வர்த்தக நிலையத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிந்த எரிவாயு சிலிண்டர் நேற்று திருட்டுப் போயிருந்தது.

 வர்த்தக நிலையத்தின் வர்த்தகர் அங்கிருந்த சீ.சீ.ரி.வி கமராவைப் பார்வையிட்ட போது, இரவு 7.45 மணியளவில் கடையின் முன் நின்ற ஒருவர் எரிவாயு சிலிண்டரை திருடிச் சென்றமை தெரியவந்துள்ளது.

Powered by Blogger.