ஒட்டுசுட்டான் பகுதியில் பேருந்து நிலையம் அமைத்துத்தருமாறு கோரிக்கை!

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பகுதியில் நவீன
வசதிகளைக்கொண்ட பேருந்து நிலையம் ஒன்றினை அமைக்குமாறு பிரதேச பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 முல்லைத்தீவு மாவட்டத்தின் உப நகரங்களில் ஒன்றாகக் காணப்படும் ஒட்டுசுட்டான் பகுதியானது போக்குவரத்து சேவைகளின் இணைப்பு மையமாக காணப்படுகின்றது.

 இந்நிலையில், ஒட்டுசுட்டான் பகுதியில் பேருந்து நிலையம் ஒன்று இன்மையால் பயணிகளும் பொதுமக்களும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்துள்ளனர்.

 இதன்காரணமாக இப்பகுதியில் பேருந்து நிலையம் ஒன்றினை அமைத்துத் தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Powered by Blogger.