வவுனியாவில் பெருமளவான வெடிபொருட்கள் மீட்பு! ஒருவர் கைது !

வவுனியா - கட்டமஸ்கட மலையடி பருத்திக்குளம் பகுதியில் பெருமளவான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக மாமடு பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி எஸ்.ஜி.எஸ்.கே.செனரத் தெரிவித்துள்ளார்.

 மலையடி பருத்திக்குளம் பகுதியில் அமைந்தள்ள கற்குவாரியிலிருந்து ஆயிரத்து ஏழு கிலோகிராம் அமோனியா வெடி மருந்துகளும், 774 டெட்டிநேற்றர்களும், 306 ஜெலக்நைற் குச்சிகளும், மீட்கப்பட்டுள்ளன.

 இது குறித்து பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக மடுகந்த விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 இதன்போது, அனுராதபுரம் பகுதியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  மேலும், சந்தேகநபரை நாளைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக மாமடுவ பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Powered by Blogger.