முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு அதிகாரசபையினால் சுயதொழில் !

புனர்வாழ்வு அதிகாரசபையின் சுயதொழில் கடன் திட்டத்தின் கீழ் உள்ள
பயனாளிகளின் உற்பத்தி பொருட்களின் கண்காட்சியும், விற்பனையும் இன்று காலை 10 மணிக்கு யாழ்.சங்கிலிய ன் பூங்கா வளாகத்தில் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதனால் ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கின்றது.

மீள்குடியேற்ற பகுதிகள் மற்றும் முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு அதிகாரசபையினால் சுயதொழில் கடன் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சுயதொழில் கடன் ஊடாக மேற்கொள்ளப்ப ட்ட உள்@ர் உற்பத்தி பொருட்களின் கண்காட்டியும், விற்பனையுமே நேற்று ஆரம்பிக்கப்ப ட்டுள்ளது. இந்நிகழ்வில் மீள்குடியேற்றம் மற்றும், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி, இந்து மத அலுவல்கள் அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் கலந்து கொ ண்டு கண்காட்சியை திறந்துவைத்தார். இந்நிகழ்வில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளும ன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராஜா, யாழ்.மாநகர முதல்வர் இ.ஆனோல்ட் மற்றும் அ மைச்சின் செயலாளர், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர், இந்திய துணை தூதுவர், வடமாகாண விவசாய அமைச்சர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
Powered by Blogger.