சாவகச்சேரியில் கனரக வாகனங்கள் மோதி விபத்து!

மீசாலை -ஐயா கடைச் சந்திப் பகுதியில் ஏ9வீதியில்
வியாழக்கிழமை காலை 5மணியளவில் இடம்பெற்ற டிப்பர் விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

ஐயா கடைப் பகுதியில் ஏ9வீதி ஓரமாக நின்ற டிப்பருடன் கொடிகாமம் பகுதியில் இருந்து வந்த டிப்பர் பின்பக்கமாக மோதியதிலேயே இவ் விபத்து சம்பவித்துள்ளது.

இதன் போது கொடிகாமம் பகுதியில் இருந்து வந்த டிப்பர் ரயில் தண்டவாளத்திற்கு குறுக்காக மீட்க முடியாதவாறு நின்றுள்ளதுடன்,வீதி ஓரமாக நின்ற டிப்பர் மணலுடன் குடை சாய்ந்துள்ளது.

இதன் போது கொடிகாமம் பகுதியில் இருந்து வந்த டிப்பரின் சாரதியான தம்மிணைக்குளம் மடு வீதி மன்னாரைச் சேர்ந்த 27 வயதான லோகநாதன் சர்மிலன் என்பவர் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் ரயில் பிரயாணம் சுமார் இரண்டு மணி நேரம் தாமதித்தே பயணத்தை தொடர்ந்தது. மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்  

No comments

Powered by Blogger.