கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில்
ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்தாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவத்தில் கித்துள் கிராமத்தைச் சேர்ந்த கறுப்பையா இராமகிருஷ்ணன் எனும் குடும்பஸ்த்தரே பலியாகியுளளார்.

புதன்கிழமை இரவு இந்தப் பிரதேசங்களில் பலத்த மழை பெய்திருந்த வேளையில் சிலர் வேட்டைக்குச் சென்றுள்ளனர்.

அவ்வேளையில் சேற்றுப் பாதையூடாகச் செல்லும் போது வழுக்கி வீழ்ந்ததில் தன் வசமிருந்த கட்டுத் துப்பாக்கி வெடித்து படுகாயமடைந்துள்ளார்.

இந்நிலையில் காயமடைந்த குறித்த நபரை மீட்டு கரடியனாறு பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் தற்போது உடற்கூறு பரிசோதனைக்காக கரடியனாறு பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். 

No comments

Powered by Blogger.