” காட்டுமிராண்டித் தனமான கொலைகளை வன்மையாக கண்டிக்கிறேன்”!

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தமிழில் வளர்ந்து வரும்
இயக்குனர்களில் ஒருவர். பீசா, இறைவி, ஜிகர்தண்டா போன்ற வித்தியாசமான திரைப்படங்களை இயக்கி இருப்பவர். இவர் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து ஒரு படம் இயக்க இருக்கிறார்.

திரைத்துரையில் இளம் வயதில் சாதனை படைத்த இயக்குனர்களுள் ஒருவரான இவர், சாதியின் பெயரால் நடைபெரும் கொலைகளை கண்டித்து ஒரு டிவிட்டர் பதிவை வெளியிட்டிருக்கிறார்.

சமீபத்தில் சிவகங்கை மாவட்டத்தில் ஆதிக்க சாதியினர் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த 2 பேரை கொடூரமாக வெட்டிக்கொன்றிருக்கின்றனர். இந்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட 8 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதே போல கேரளாவிலும் கலப்பு திருமணம் செய்த காரணத்திற்காக தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்த இளைஞர் ஒருவரை, கண்களை நோண்டி பயங்கரமாக தாக்கி, கொடூரமாக கொலை செய்திருக்கின்றனர் அந்த பெண்ணின் குடும்பத்தார்.

சாதியின் பெயரால் நடக்கும் இது போன்ற கொலைகளை கண்டிக்கும் விதமாக கார்த்திக் சுப்புராஜ் தனது டிவிட்டர் பதிவில் “ சிவகங்கையில் நடந்த கொடூர கொலை சம்பவம் மற்றும் கேரளாவில் நடந்த ஆணவக்கொலை போன்றவை நமது நாட்டில் இருக்கும் சாதியத்தின் ஆதிக்கத்தை காட்டுக்கிறது. இது மிகவும் கொடுமை. சாதியின் பெயரால் நடக்கும் இது போன்ற படுகொலைகளை நான் வன்மையாக கண்டிக்கிறேன். சாதிவெறி பிடித்து திரிபவர்களை நினைத்து வெட்கப்படுகிறேன்” என தெரிவித்திருக்கிறார்.

No comments

Powered by Blogger.