தமிழக தொப்பிள்க்கொடி உறவுகளின் நீதிக்காக ஒன்றுகூடுவோம் - யேர்மனி!

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட
வலியுறுத்தி 18க்கும் மேற்பட்ட கிராம மக்கள், நேற்று 100-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். சனநாயக ரீதியிலான ஒரு கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ஆயிரக்கணக்கானோர் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிச் சென்றுள்ளனர். அப்போது காவல் துறையினருக்கும் மக்களுக்கும் இடையே மோதல் வெடித்ததில் காவல்துறையினர் சரமாரியாக மக்கள் கூட்டத்தை நோக்கிச் சுட்டதில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதுடன் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.


இந்தத் துப்பாக்கிச்சூட்டில் 3 பெண்கள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்ற நிலையில் தொப்பிள்கொடி உறவுகளான ஈழத்தமிழர்கள் சார்பில் யேர்மன் வாழ் தமிழ் மக்களும்  தமிழகமக்களின் இந்தத் துயரச் சம்பவத்திற்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

திட்டமிட்ட கொடூரமான அரச பயங்கரவாத ஒடுக்குமுறையை கண்டித்தும் எமது தமிழக உறவுகளுக்கு ஆதரவாகவும் எதிர்வரும் திங்கள்கிழமை மாலை 16:30 மணிக்கு யேர்மன் தலைநகரத்தில் இந்திய        தூதரகத்திற்கு முன்பாகவும் , பிராங்பேர்ட் நகரில் இந்திய துணைத்தூதரகத்திற்கு முன்பாகவும் கவனயீர்ப்பு நிகழ்வுகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.    

யேர்மன் வாழ் தமிழ் மக்கள் 
தொடர்புகளுக்கு 
பேர்லின் : 015231036871
பிராங்பேர்ட் : 01777946577
Powered by Blogger.