நீதிபதி இளஞ்செழியனை யாழ்.இராணுவ தளபதி சந்திப்பு!

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக மாற்றலாகிச்
செல்லும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனை யாழ்ப்பாணம் இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராட்சி இன்று நேரில் சந்தித்தார்.
இதன்போது மேல் நீதிமன்ற நீதிபதிக்கு மரத்திலான யானையை நினைவுச் சின்னமாக கட்டளைத் தளபதி வழங்கி வைத்தார்.
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

No comments

Powered by Blogger.