முதலமைச்சருக்கு பிரத்தியேக பாதுகாப்பு அதிகாரிகள் போல செயற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்ற முறைமை தொடர்பில், தேசிய பல்கலைக்கழக ஆசிரியர் ஒழுங்கமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது.

 அதன் ஊடக அறிக்கை ஒன்றின் ஊடாக, குறித்த அமைப்பின் செயலாளர் பேராசிரியர் ச்சன்ன ஜயமன்ன இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு கடந்த 18ம் திகதி நடைபெற்றது.

 இதன் போது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் பங்கேற்காத போதும், வடமாகாண முதலமைச்சருக்கு பிரத்தியேக பாதுகாப்பு அதிகாரிகள் போல யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் செயற்பட்டதாக, பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.  அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட பல்கலைக்கழக மாணவர்களை அனுமதிக்கக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

Powered by Blogger.