நேற்று நள்ளிரவு முதல் அடையாள பணிப்புறக்கணிப்பு!

தொடரூந்து சேவையின் 3ஆம்வகுப்பு பணியாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.  வேதன பிரச்சினை, வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு மேற்கொள்ளாமை உள்ளிட்ட விடயங்களை முன்வைத்து இந்த அடையாள பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகிறது.

 இந்த போராட்டத்தில் தொடரூந்து நிலைய சமிக்ஞையாளர்களும் இணைந்து கொள்ளவிருந்த போதும், அவர்கள் அதிலிருந்து விலகியுள்ளனர்.  எவ்வாறாயினும், இந்த போராட்டத்தினால் தொடருந்து பயணத்திற்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை என தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
Powered by Blogger.