தமிழ் திரைப்படத்தில் படையெடுக்கும் அரசியல்!

தமிழ் சினிமாவில் இருந்து பல நடிகர்கள் அரசியலில் நுழைந்து
வரும் நிலையில், அரசியல் படங்களும் வரிசைக்கட்டி இருக்கின்றன. ஜெயலலிதா இருந்தவரை நடிகர்கள் யாருமே அரசியலை பற்றி நினைத்துகூட பார்க்கவில்லை. ஆனால் அவரது மறைவிற்கு பிறகு சினிமாவில் இருந்து அரசியலுக்கு ஒவ்வொருவராக வந்து கொண்டிருக்கிறார்கள். இது ஒரு புறம் இருக்க, தமிழ் சினிமாவில் அரசியல் நையாண்டி படங்கள் அதிகமாக உருவாகி வருகின்றன.
தமிழ்படம் 2 பட விளம்பரத்தில் தர்ம யுத்தத்தை கிண்டல் செய்திருந்தார்கள். கரு.பழனியப்பன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் ‘புகழேந்தி எனும் நான்’ படம் அரசியல் நையாண்டி படமாக உருவாகிறது. விஜய் நடிக்க முருகதாஸ் இயக்கிவரும் படத்தில் நடப்பு அரசியல் சூழலை பிரதிபலிக்கும் விதமாக அதிகாரத்திற்காக சண்டை போடும் இரண்டு அரசியல்வாதி கதாபாத்திரங்கள் இருக்கின்றன.
காலா படத்தில் ரஜினியும் அரசியல் பேசியுள்ளார். இந்தியன்-2 படத்தில் கமல் அரசியல்வாதியாக நடிக்கிறார். சூர்யா நடிக்கும் என்.ஜி.கே படம் அரசியல் படம் என்பது போஸ்டரிலேயே தெரிகிறது. சத்யராஜ் நடிக்கும் ‘சினிமா நடிகனும் அரசியல்வாதியும்’, டி.ராஜேந்தர் இயக்கி நடிக்கும் படம், ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் எல்கேஜி, அட்டகத்தி தினேஷ் நடிக்கும் அண்ணனுக்கு ஜே, அமீர் நடிக்கும் எம்ஜிஆர் பாண்டியன், வைபவ் நடிக்கும் ஆர்.கே. நகர் என அரசியலை கிண்டல் பண்ணும் கதைகளை கொண்ட படங்கள் தமிழ் சினிமாவில் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன.
கற்பனையை மிஞ்சும் வகையில் அரசியலில் பரபரப்பான சம்பவங்களும், சுவாரஸ்யமான நிகழ்வுகளும் நடப்பதால் இயக்குனர்களுக்கு அதில் இருந்து கதை உருவாக்குவது எளிதாக இருக்கிறது என்கிறார் மூத்த தயாரிப்பாளர் ஒருவர். 

#PoliticslFilms

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.