105 வயது வரை வாழும் மூதாட்டியின் ரகசியம்!

அமெரிக்காவில் 105 வயது மூதாட்டி ஒருவர் நான் புகைப்பிடிப்பேன், மது அருந்துவேன் என்று கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


தற்போது உள்ள உலகில் தொடர்ந்து மது அருந்தினாலோ, புகைப்பிடித்தாலோ அவரின் ஆயுட்காலம் பாதியாக குறைந்துவிடும் என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.

ஆனால் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் Palm Harbor பகுதியில் வசித்து வரும் Helen Granier என்ற மூதாட்டி கடந்த வெள்ளிக் கிழமை தன்னுடைய 105-வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.இது குறித்து அவர் கூறுகையில், நான் இத்தனை ஆண்டுகள் இருப்பேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. என்னுடைய கடந்த காலங்களை நினைத்து பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது.

பீர் குடிப்பேன், புகைப்பிடிப்பேன், வீட்டிற்கு தாமதாக வருவேன் என்று புன்னகையுடன் கூறியுள்ளார். மேலும் சூதாட்டத்தின் மீது கொண்ட அதீத ஆசையால் அமெரிக்காவின் Las Vegas பகுதிக்கு செல்ல வேண்டும் என்பது தான் ஆசை.ஆனால் என் கணவர் அதற்கு தடையாக இருந்ததால் என்னால் செல்ல முடியவில்லை. ஆனால் அவர் இறந்த பின்பு Las Vegas-க்கு சென்றேன். என் ஆசையை நிறைவேற்றிக் கொண்டேன்.

அதை எல்லாம் எப்போதும் மறக்க முடியாது. எனக்கு மூன்றோ அல்லது நான்கோ வயது இருக்கும் போது முதல் உலகப் போர் நடந்தது என்று கூறியுள்ளார்.
Powered by Blogger.