இரா.சம்பந்தன் கேப்பாபுலவு மக்களிடம் வழங்கிய பல்குழல்!

கேப்பாபுலவில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களின் காணிகளை முற்று முழுதாக அந்த மக்களிடம் மீள கையளிக்கவுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.


கேப்பாபுலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களை நேற்றிரவு 7.00 மணியளவில் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு உறுதியளித்துள்ளர்.

இது தொடர்பாக இராணுவத் தரப்பினரிடம்; பேச்சுவார்த்தை தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது முல்லைத்தீவு கேப்பாபுலவு கிராமத்தை கைப்பற்றிய இராணுவத்தினர் பொதுமக்களின் காணிகளில் பாரிய முகாங்களை அமைத்து நிலைகொண்டிருந்தனர்.


இதனால் தமது பூர்வீக நிலங்களை இராணுவத்தினர் மீள கையளிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் கேப்பாபுலவு மக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கேப்பாபுலவு-இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களின் காணிகளில் ஒருதொகுதி காணிகள் அண்மையில் விடுவிக்கப்பட்டுள்ளது.

மீதி; 59.95 ஏக்கர் நிலங்கள் விடுவிக்கப்படவில்லை என்பதை தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பாரளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் அறிந்து கொண்டுள்ளதாக தெரிவித்தார் என எம்.ஏ.சுமந்திரன் குறிப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் பொதுமக்களின் காணிகளை முற்றும் முழுதாக அந்த மக்களிடம் மீளக் கையளிப்பற்கு ஜனாதிபதியும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்ற சந்தர்ப்பத்தில் மிக விரைவில் பொதுமக்களின் காணிகள் அந்த மக்களிடம் மீள கையளிக்காப்படும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன கேப்பாபுலவு மக்களிடம் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Powered by Blogger.