விடுவிக்கப்பட்ட காணிகளில் 16 வீடுகளே வசிக்கக் கூடிய நிலமையில்!

வலி.வடக்­கில் இரா­ணு­வத்­தி­னர் வச­மி­ருந்த 33 ஏக்­கர் காணி­கள் நேற்று மக்­கள் பாவ­னைக்­குக் கைய­ளிக்­கப்­பட்­டன. ஜே/236 கிராம
அலுவலர் பிரி­வில் பளை­வீ­மன்­கா­மத்­தில் உள்ள காணி­களே  விடு­விக்­கப்பட்­டுள்­ளன. அவற்­றைக் கைய­ளிக்­கும் ஆவ­ணத்தை தெல்­லிப்­ப­ழைப் பிர­தேச செய­ல­ரி­டம் யாழ்ப்­பா­ணம் மாவட்ட இரா­ணு­வத் தலை­மை­ய­கம் வழங்­கி­யுள்­ளது.

27 ஆண்­டு­க­ளின் பின்­னர் இந்­தக் காணி­கள் மக்­க­ளி­டம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளன. காணி­களை அடை­யா­ளப்­ப­டுத்­தும் நட­வ­டிக்­கை­க­ளில் காணி உரி­மை­யா­ளர்­கள் ஈடு­பட்­டுள்­ள­னர். காணி உரி­மை­யா­ளர்­கள் காணி­க­ளைப் பொறுப்­பேற்க வர வேண்­டும் என்று பிர­தேச செய­லர் ச.சிவஸ்ரீ கோரி­யுள்­ளார்.

விடு­விக்­கப்­பட்ட பகு­தி­க­ளில் பெரும்­பா­லான வீடு­கள் சேத­ம­டைந்­துள்­ளன. 16 வீடு­கள் மக்­கள் வசிக்­கக் கூடிய நிலை­யில் காணப்­ப­டு­கின்ற என்று கூறப்­ப­டு­கின்­றது. அவை படை­யி­ன­ரின் பாவ­னை­யில் இருந்­தி­ருக்­க­லாம் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. விடு­விக்­கப்­பட்ட பகு­தி­யில் படை­யி­ன­ரின் பயன்­பாட்­டில் இருந்த விகாரை ஒன்­றும் உள்­ளது.

இது­வரை விடு­விக்­கப்­ப­டா­தி­ருந்த கிரா­மக்­கோட்­டடி வீதி­யும் நேற்று விடு­விக்­கப்­பட்­டுள்­ளது. இந்த வீதி 700 மீற்­றர் நீள­மு­டை­யது. விடு­விக்­கப்­பட்ட பகு­தி­களை பிர­தேச சபைத் தவி­சா­ளர் சோ.சுகிர்­தன் பார்­வை­யிட்­டார். மக்­க­ளு­ட­னும் கலந்­து­ரை­யா­டி­னார். 
Powered by Blogger.