16 பேர் அணியின் உதவி தேவையில்லை!

மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் அமர்த்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணியின் உதவி தமக்குத்
தேவையில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேரும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தாலும் அவர்கள் சுதந்திரக் கட்சியின் பதவிகளை தொடர்ந்தும் வகித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேரில் பெரும்பாலானவர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்களின் எண்ணம் ஒரு போதும் வெற்றி ​அளிக்காது என்றும் 16 பேரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்டால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வேட்பாளராக நிறுத்தும் நபருக்கு அவர்கள் ஆதரவளிக்க வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.