16வது தலைவராக சுரங்க லக்மால்!

மேற்கிந்திய அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது இலங்கை அணியினர் பந்தின் தன்மையை மாற்ற முயற்சித்த விவகாரத்தில் கடந்த 19ம் திகதி சர்வதேச கிரிக்கெட் சபையினால் இலங்கை அணி தலைவருக்கு ஒரு போட்டி தடையும் 100% அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் ஐசிசியின் தடையை எதிர்த்து இலங்கை அணி தலைவர் தினேஷ் சந்திமால் நேற்று முன் தினய் மேன்முறையீடு செய்திருந்தார்.

குறித்த மேன்முறையீடு நேற்று (22) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது நீதி ஆணையாளரால் மைக்கல பெலப்பினால் மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, ரங்கன ஹேரத் காயமடைந்துள்ளதால் இலங்கை டெஸ்ட் அணியில் 16 ஆவது தலைவராக சுரங்க லக்மால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமால், அணியின் பயிற்சியாளர் சந்திக ஹத்துருசிங்க, அணியின் முகாமையாளர் அசங்க குருசிங்க ஆகியோர் களத்தடுப்பை பகிஷ்கரித்தமை தொடர்பில் ஐசிசியின் 2.3.1 விதிமுறையை மீறியதை ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Powered by Blogger.