படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 190க்கு மேல் காணவில்லை!

இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 190க்கும் மேற்பட்டவர்கள் காணாமால் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர், தோபா ஏரியில் பயணிகளுடன் சென்ற சுமத்ரா படகு திடீரென்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காணாமல் போனோரின் எண்ணிக்கை முதலில் 130 பேர் என அறிவிக்கப்பட்டது.


இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் 190க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களின் உறவினர்கள் வழங்கிய தகவலின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் இதுவரை 18 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து 3 நாட்களுக்கு முன்பு நடந்த விபத்து என்பதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.


படகில் 60 நபர்களை ஏற்றுவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும், சுமத்ரா படகில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 3 மடங்கு ஆட்களும், பொருட்களும் ஏற்றிச்செல்லப்பட்டுள்ளனர்.

இதுவே விபத்துக்கு காரணம் என அந்நாட்டு போக்குவரத்துத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், காணாமல் போனவர்களை தேடும் பணியில் நீர் மூழ்கி கப்பல்களும், நீர் மூழ்கி வீரர்களும் நீருக்கு அடியில் இயங்க கூடிய ட்ரோன்களும் ஈடுபட்டிருப்பதாக தேசிய மீட்பு குழுவின் தலைவர் தெ

ரிவித்துள்ளார்.
Powered by Blogger.