செனகல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் போலந்தை வீழ்த்தியது!

உலக கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு போலந்து மற்றும் செனகல் அணிகள் மோதின.

போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் 37வது நிமிடத்தில் செனகல் அணியின் தியாகோ சியோனெக் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.
இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் செனகல் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இதைத்தொடர்ந்து, ஆட்டத்தின் 60-வது நிமிடத்தில் எம் பாயே நியாங் ஒரு கோல் அடிக்க, செனகல் அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
தொடர்ந்து ஆடிய போலந்து அணி ஆட்டத்தின் இறுதியில் 86 வது நிமிடத்தில் கிரிசோவியக் ஒரு கோல் அடித்தார். அதன்பின் ஆட்டம் முடியும் வரை போலந்து அணி மற்றொரு கோல் அடிக்கவில்லை.
இறுதியில், செனகல் அணி போலந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 
Powered by Blogger.