சுவிட்சர்லாந்து 2 – 1 என்ற கோல் கணக்கில் வெற்றி!

21 ஆவது உலக கிண்ண கால்ப்பந்து தொடர் ரஷ்யாவில் தற்போது இடம்பெற்று வருகிறது.


நேற்று நள்ளிரவு இடம்பெற்று முடிந்த 26 ஆவது போட்டியில் சுவிட்சர்லாந்து 2 – 1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றுள்ளது.

செர்பியா மற்றும் சுவிட்சர்லாந்து அணிகள் மோதிய இந்த போட்டியில் செர்பியாவின் அலெக்ஸ்சாண்டர் மிட்ரோவிக் 5 ஆவது நிமிடத்தில் முதலாவது கோல் அடித்தார். நீண்ட நேரங்களின் பின்னர் சுவிட்சர்லாந்தின் க்ரனிட் ஸ்ஹாகா 52 ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடிக்க போட்டி சமநிலையை நோக்கி நகர்ந்தவேளை சுவிட்சர்லாந்தின் ஸ்ஹேர்தன் ஷகிரி 90 ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடிக்க இறுதியில் சுவிட்சர்லாந்து அபாரமாக வெற்றிபெற்றது. 
Powered by Blogger.