2020ஆம் ஆண்டுக்குள் வடகொரியா அணுவாயுதங்களைக் கைவிடும்!

வடகொரியா, 2020ஆம் ஆண்டுக்குள் அதன் அணுவாயுதங்களைப் பெரிய அளவில் கைவிடும் என எதிர்பார்ப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பேயோ கூறியுள்ளார்.


தென்கொரியத் தலைநகர் சோலுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், அவ்வாறு கூறினார்.

சிங்கப்பூரில் அமெரிக்க அதிபருக்கும் வடகொரியத் தலைவருக்கும் இடையே நடைபெற்ற உச்சநிலைச் சந்திப்பு குறித்து தென்கொரிய அதிகாரிகளிடம் திரு பொம்பேயோ பேசினார்.

கொரியத் தீபகற்பத்தை முற்றிலும் அணுசக்தியற்ற பகுதியாக மாற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ள, இரு தலைவர்களும் இணங்கின்றனர்.

இருப்பினும், வடகொரியாவின் அணுவாயுதங்கள் பற்றி அதிகம் பேசப்படவில்லை.

தென்கொரியப் பயணத்தைத் தொடர்ந்து, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பொம்பேயோ இன்று சீனா செல்கிறார்.

அமெரிக்க-வடகொரியத் தலைவர்களுக்கு இடையே நடைபெற்ற சந்திப்பு குறித்து, சீன வெளியுறவு அமைச்சிடம் அவர் தகவல் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Powered by Blogger.