பேருந்துகள் நேருக்கு நேர் மோதி ஒருவர் பலி,25பேர் காயம்!

அலவ்வ – கப்புவரல பிரதேசத்தில் இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் மேலும் 25 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

விபத்தில் 60 வயதான நபரொருவரே உயிரிழந்துள்ளார்.

கதுருவெலயில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தொன்று, எதிர் திசையில் வந்த பேருந்துடன் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக காவல்துறை மேலும் குறிப்பிட்டுள்ளது.

விபத்து தொடர்பில் அலவ்வ காவல்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.Powered by Blogger.