இலங்கையில் திடீர் சுற்றிவளைப்பில் 4 துப்பாக்கிகளுடன் 10 பேர் கைது!

மொனராகலை – கொட்டியாகல – ஹெவனேவெல பிரதேசத்தில்

காவல்துறை மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் உள்நாட்டில் உற்பத்திய செய்யப்பட்ட 4 துப்பாக்கிகளுடன் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ள நிலையில், மிருகங்களை வேட்டையாடுவதற்காக அவர்கள் இந்த துப்பாக்கிகளை பயன்படுத்தியுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த நபர்கள் வனப்பகுதிகளுக்கு சென்று மிருகங்களை வேட்டையாடி அவற்றை இறைச்சியாக்கி விற்பனை செய்வதாக கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, கெலேவெவ தேசிய பூங்காவில் மான் ஒன்றை வேட்டையாடிய நபரொருவர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்கிரியாகம வனவிலங்கு அதிகாரிகளால் இன்று அதிகாலை அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 
Powered by Blogger.