மட்டக்களப்பில் பொன். சிவகுமாரனின் 44 நினைவேந்தல் த.தே.ம.மு நினைவுகூரல்!

தமிழ் தேசிய விடுதலைக்காக முதற் தற்கொடையாளர் பொன். சிவகுமாரின் 44 ஆவது நினைவேந்தல் நிகழ்வு நேற்று

செவ்வாய்கிழமை மாலையில் (05) மட்டக்களப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் காரியாலயத்தில் எழுச்சிபூர்வமாக இடம்பெற்றது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டு இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கட்சி உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டு பொன் சவகுமாரரின் உருவப்படத்திற்கு சுடர் ஏற்றி மலர்மலை அணிவித்து உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.

இதில் அவரின் பெயரில் வறுமை நிலையில் உள்ள கல்விகற்றும் 2 மாணவர்களுக்கு உதவி தொகையாக பணம் வழங்கிவைக்கப்பட்டது.
Powered by Blogger.