ஏறாவூரில் மயங்கிக் கிடந்த இளைஞர்!

மட்டக்களப்பு - ஏறாவூரில் மயங்கிக் கிடந்த இளைஞர் ஒருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. ஏறாவூர் ஆறுமுகத்தான்குடியிருப்பு கலைமகள் பாடசாலை வீதியைச் சேர்ந்த முஹம்மது அக்ரம் (வயது 16) என்பவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

குறித்த இளைஞர் மயக்கமடைந்து வீதியில் கிடப்பதை அவதானித்த மனிதாபிமானியொருவர் அவரை உடனடியாக முச்சக்கரவண்டியொன்றில் ஏற்றிச் சென்று வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். 
Powered by Blogger.