ஏமன்: குடியேறிகள் சென்ற படகு கவிழ்ந்ததில் 46 பேர் உயிரிழப்பு!

சோமாலியாவில் இருந்து ஏமனுக்கு செல்ல முயற்சி செய்த குடியேறிகள் பயணம் செய்த படகு கவிழ்ந்ததில், குறைந்தது 46 குடியேறிகள் நீரில் மூழ்கிவிட்டதாக ஐ.நா. (ஐக்கிய நாடுகள் சபை) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏமன்: குடியேறிகள் சென்ற படகு கவிழ்ந்ததில் 46 பேர் உயிரிழப்புபடத்தின்

IMAGE COPYRIGHTIOM
ஏமன் கடற்கரையில் அப்பால் உள்ள பெரும் அலைகள் நிரம்பிய கடலில் குடியேறிகள் சென்ற படகு தலைகீழாக கவிழ்ந்ததில், மேலும் 16 பேர் காணாமல் போயுள்ளதாக ஐஒஎம் எனப்படுகின்ற குடியேற்றத்திற்கான சர்வதேச அமைப்பு கூறியுள்ளது.

போசாஸோ துறைமுகத்தில் இருந்து குறைந்தது 100 பேரை ஏற்றிச்சென்ற அந்த படகில் பயணம் செய்தவர்கள் ஏமன் மற்றும் பிற வளைகுடா நாடுகளில் வேலை தேடி கிளம்பியதாக விபத்தில் உயிர் தப்பியவர்கள் குறிப்பிட்டனர்.

குடியேறிகள் அனைவரும் எத்தியோப்பிய நாட்டினர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதன்கிழமை காலை இந்த படகு கடலில் கவிழ்ந்ததாக ஐஒஎம் தெரிவித்துள்ளது.

விபத்து நடந்த கடற்பரப்பின் வரைபடம்
Image captionவிபத்து நடந்த கடற்பரப்பின் வரைபடம்
இந்த படகு விபத்தில் இறந்தவர்களில் 37 பேர் ஆண்கள், 9 பேர் பெண்கள் ஆவர்.

விபத்துக்குள்ளான படகில் பயணம் செய்தவர்களில் பலரும் உயிர்காப்பு சாதனங்கள் எதுவுமின்றி பயணம் செய்ததாக உயிர் தப்பியவர்கள் தெரிவித்தனர்.
Powered by Blogger.