494 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்!

மேல் மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிவர்த்தி செய்யும் வகையில் இன்று 494 பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.


இதற்கான நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று காலை தாமரை தடாகம் கலையரங்கில் நடைபெறவுள்ளது.

2014, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட போட்டி பரீட்சைகளில் அதிகூடிய புள்ளிகளை பெற்ற பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் வேலைத்திட்டத்தின் ஒரு கட்டமாக இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

2015 முதல் இதுவரையான காலப்பகுதியில் மேல் மாகாணத்தில் இரண்டாயிரத்து 822 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
Powered by Blogger.