செயிண்ட் ரெஜிஸ் ஹோட்டல் அருகே கைதுசெய்யப்பட்ட 5 தென்கொரியர்களுக்குக் கடும் எச்சரிக்கை!

சிங்கப்பூரில் செயிண்ட் ரெஜிஸ் (St Regis) ஹோட்டல் அருகே கைதுசெய்யப்பட்ட 5 தென்கொரியர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டு, அவர்களது சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


பொது ஒழுங்குச் சட்டத்தின்கீழ் அந்த ஐவரும் இம்மாதம் 11ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.

அவர்களின் சமூக வருகையாளர் அனுமதி ரத்து செய்யப்பட்டு அவர்கள் தென்கொரியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

செயிண்ட் ரெஜிஸ் (St Regis) ஹோட்டலில்தான் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னும் அவரது பேராளர் குழுவினரும் தங்கியிருந்தனர்
Powered by Blogger.