கட்டுநாயக்க விமான நிலைய பயணிகளுக்கு முக்கிய அறிவித்தல்!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும் முக்கிய அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.


விமான நிலையம் ஊடாக வெளிநாட்டுக்கு பயணிப்போர் 4 மணி நேரத்திற்கு முன்னர் விமான நிலையத்திற்கு வருமாறு ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நடைபெறும் திருத்த வேலைகள் காரணமாகவே விசேட வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

பயணிகள் 4 மணி நேரத்திற்கு முன்னர் விமான நிலையத்திற்கு வருகை தருவதால், பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியத்தை தவிர்த்து கொள்ள முடியும் எனவும் ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Powered by Blogger.