ஜஸ்டினை வசைபாடும் ட்ரம்ப்பும் ஜி7 மாநாடுமும்!

ஜி7 மாநாட்டின் கூட்டறிக்கையை ஏற்க மறுத்து வெளியேறிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோவை கடுமையாக சாடியிருக்கிறார்.

கனடா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் அடங்கிய ஜி7 உச்சி மாநாடு கனடாவின் கியூபெக்கில் லமாவ்பே நகரில் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் அமெரிக்கா சார்பில் கலந்துகொண்ட டொனால்ட் ட்ரம்ப் மாநாட்டில் முடிவான கூட்டு அறிக்கையை ஏற்க மறுத்ததுடன் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ட்விட்டரில் கடுமையாக சாடியுள்ளார். 
மற்ற 6 நாடுகளும் ஆதரித்துள்ள ஜி7 மாநாட்டு கூட்டறிக்கையை அமெரிக்கா மட்டும் மறுத்துள்ளது. இது பற்றி ஜூலை 1ஆம் தேதி முதல் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.
 மாநாட்டிலிருந்து தீடீரென வெளியேறிய ட்ரம்ப் செய்தியாளர்களைச் சந்தித்து, "எஃகு மற்றும் அலுமினிய இறக்குமதிக்கு கனடா அமெரிக்கா மீது அநியாய வரி விதிக்கிறது." என்றார். மேலும், ட்விட்டரில் பதிவிட்ட ட்ரம்ப், கனடா பிரதமர் ட்ரூடோ 'நேர்மையற்றவர்' என்றும் 'பலவீனமானவர்' என்றும் வசைபாடினார்.
"அமெரிக்காவின் மீது கனடா வரி சுமத்தும் விதம் அவமானப்படுத்துவது போல் உள்ளது. பால் பொருட்கள் மீது 270% வரி போடும் கனடாவுக்கு தெரிவிக்கும் பதிலாகவே மாநாட்டிலிருந்து வெளியேறியனேன்." என்றும் அவர் கூறியுள்ளார்.
ட்ரம்ப்பின் இந்த அதிரடி முடிவைத் தொடர்ந்து அமெரிக்கா கனடாவுடன் ‘வர்த்தகப் போர்’ ஏற்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது. 
Powered by Blogger.