"ஏர் சிலோன்" ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸாக மாறிய மாற்றங்கள்!

ஒரு நாட்டின் வளர்ச்சியில் செல்வாக்கு செலுத்தும் அல்லது ஆகிக்கம் செலுத்தும் பிரதான காரணிகள் அந்நாட்டின் சேவைகள் மற்றும் முக்கியத்துறைகளை மேம்படுத்துவதில் அந்த அரசாங்கம் காட்டும் கரிசனைப்போக்குதான்.


இந்நிலையில், நம் நாட்டைப்பொறுத்தவரையில் இயற்கை எழில் தவழும் ஒரு சுவர்க்கத் தீவு என்றே கூறலாம், இயற்கை அன்னை வஞ்சனையின்றி நம் நாட்டிற்கு கொட்டிக்கொடுத்த வளங்களை காண வெளிநாட்டில் இருந்து நம் நாட்டை நோக்கி படையெடுக்கும் இயற்கையின் காதலர்கள் கோடி..

இந்நிலையில், அந்த சுற்றுலாத்துறையை மேலும் அதிகரிக்கவென நம் நாட்டில் வழங்கப்படும் சேவைகளும் அதிகம், அதில் ஒன்றுதான் போக்குவரத்து, அதிகம் பயன்படுத்தப்படுவது வான் வழியான போக்குவரத்துதான்.

தற்போது நவீன வசதிகளுக்கேற்ப விமான போக்குவரத்து வெகு வளர்ச்சி கண்டுள்ளது, நம் நாட்டின் விமான சேவை நிறுவனங்களும் தங்களது சேவையை மேலும் விசாலப்படுத்தியுள்ளன.

தற்போது இயங்கிவரும் விமான சேவையான ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் வெகு பிரபல்யமானது, ஆனால் இந்த ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பழைய பெயர் ஏர் சிலோன் (Air Ceylon) என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்.

இந்நிலையில், அக்காலத்தில் ஏர் சிலோன் என்று அழைக்கப்பட்ட விமான சேவையின் பழைய புகைப்படங்கள் சில தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.

No comments

Powered by Blogger.