வலுக்கட்டாயமாக விமானத்திலிருந்து பயணிகளை இறக்க விமான ஊழியர்கள் செய்த இரக்கமற்ற செயல் !

கொல்கத்தாவில் இருந்து புறப்பட்ட ஏர் ஏசியா இந்தியா விமானத்தில் பயணிகளை வழுகட்டாயமாக வெளியேற்ற மறுத்த பயணிகளை விமானிகள்  விமானத்தின் ஏசியின் கூலிங்கை அதிகரித்து உறைய வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏர் ஏசியா விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு காரணமாக பயணிகளை அரைமணி நேரம் காத்திருக்கும்படி விமான ஊழியர்கள் அறிவித்தனர் ஆனால் அரை மணி நேரம் 4.30 மணி நேரமாக மாறி விமானத்தில் பயணிகள் காத்து கிடந்துள்ளனர்.

அதன் பின் விமான ஊழியர்கள் விமானத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது எனவே விமானம் கிளம்பாது எனகூறியுள்ளனர். பயணிகளை விமானத்திற்குள் ஏற்றுவதற்கு முன்பு இதையெல்லாம் பார்க்க மாட்டீர்களா  பயணிகள் எரிச்சலுடன் கேட்க துவங்கினர்.

அதுமட்டுமின்றி வெளியே பெரும் மழை பெய்து கொண்டிருக்கும் நிலையில் அனைத்து பயணிகளையும் விமானத்தில் இருந்து கீழே இறங்குமாறு கூறியுள்ளனர்.
ஆனால் பயணிகள் இறங்க மறுத்ததையடுத்து, அவர்களை வழுகட்டாயமாக வெளியேற்ற விமானத்தின் ஏசியை புகைமண்டலமாகும் அளவிற்கு அதிகரித்துள்ளனர்.

இதனால் விமானத்தில் இருந்த குழந்தைகள் பெண்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.மவ்லும் ஏசியை ஆஃப் செய்யுமாறு விமான ஊழியர்களிடம் வாக்கு வாதம் செய்துள்ளனர்.

இச்சம்பவம் பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Powered by Blogger.