திடீரெனெ அம்மன் கண்ணில் வடிந்த கண்ணீரால் பெரும் பரபரப்பு..!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாவி அருகில் உள்ள  ஹாலக்கி கிராமத்தில், ஒரு அம்மன் கோயில் உள்ளது. அந்தக் கோயில் பூசாரி, சில தினங்களுக்கு முன்பாக, வழக்கம் போல, இரவு பூஜைகளை எல்லாம் முடித்து விட்டு, இரவில் கோயிலைப் பூட்டிச் சென்று விட்டார்.


மீண்டும், மறு நாள் காலை வந்து கோயிலைத் திறந்தவர், கருவரைக்குள் சென்று பார்த்ததும், அதிர்ந்து போனார். அங்கே, அம்மன் கண்களில் இருந்து கண்ணீர் வந்து கொண்டே இருந்தது.

இதனைக் கண்டு, அதிசயத்து, பரவசம் அடைந்த கோயில் பூசாரி, அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்துள்ளார். இதற்குள், அம்மன் கண்களி்ல் இருந்து கண்ணீர் வரும் செய்தி அந்தப் பகுதியில் உள்ள மக்களிடம் பரவியது.

அவர்கள் அனைவரும், பரவசத்துடன் வந்து அம்மனின் அந்த அதிசய கோலத்தைக் கண்டு சென்றனர். பலர் அந்தக் காட்சியை, தங்களது மொபைல் போனில், வீடியோவாகப் பதிவு செய்து, சமூக வலைத் தலங்களில் பரவச் செய்தனர்.

இது பற்றி, அந்தப் பகுதி மக்கள் கூறும் போது, அம்மன் சிலையில் இருந்து கண்ணீர் வருவது அதிசயமாக உள்ளது. சிலர், ஏதோ அசம்பாவிதம் நடைபெறப் போகிறது, என்று அம்மன் குறிப்புணர்த்தி உள்ளார் என்றும் பேசிக் கொள்கின்றனர்.

அம்மன் கண்களில் கண்ணீர் வந்த சம்பவம், தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Powered by Blogger.