மாகாணத்துக்கான நிரலிலும் கொழும்பு அரசு தலையீடு!

அமைச்­சுக்­குத் தெரி­யா­மல், கொழும்பு அரசு நேர­டி­யா­கத் திட்­டங்­க­ளைத் தயா­ரித்துக் கூட்­டு­றவு அமைச்­சின் பணி­யா­ளர்­க­ளைப் பயன்­ப­டுத்தி நடை­மு­றைப்­ப­டுத்­து­கின்­றது. கூட்­டு­ற­வுத் துறை

மாகா­ணத்­துக்கு மாத்­தி­ரம் உரிய விட­யம். அதி­லும், கொழும்பு அரசு தலை­யீடு செய்­கின்­றது.

இவ்­வாறு வடக்கு மாகாண கூட்­டு­ற­வுத்­துறை அமைச்­சர் திரு­மதி அனந்தி சசி­த­ரன் குற்­றஞ்சுமத்­தி­னார்.

யாழ்ப்­பாண மாவட்ட ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டத்­தில், 2018ஆம் ஆண்டு வரவு –- செல­வுத் திட்­டத்­தில் கூட்­டு­ற­வுச் சங்­கங்­க­ளுக்கு ஒதுக்­கப்­பட்ட நிதி தொடர்­பில், அமைச்­சர் அனந்தி சசி­த­ரன் கருத்து வெளி­யிட்­டார்.

தமது அமைச்­சின் ஊடாகத் திட்­ட­முன்­மொ­ழிவு சமர்­பிக்­கப்­ப­ட­வில்லை. யாரோ ஒரு தனி­ந­ப­ரால் தயா­ரிக்­கப்­பட்ட திட்­டங்­க­ளுக்கு நிதி ஒதுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. வரவு – – செல­வுத் திட்­டத்­தில் 2 ஆயி­ரத்து 400 மில்­லி­யன் ரூபா கூட்­டு­ற­வுக்கு வழங்­கப்­பட்­டது.

இந்த நிதி ஒதுக்­கீட்­டுக்­கு­ரிய திட்­டங்­கள் எமது அமைச்­சால் சமர்­பிக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை. எமது அதி­கா­ரி­க­ளைப் பயன்­ப­டுத்­தியே அதனை நடை­மு­றைப்­ப­டுத்த முயற்­சிக்­கின்­ற­னர். எமது அதி­கா­ரங்­களை, கொழும்பு அரசு பறிக்­கின்­றது. இத­னைச் சுட்­டிக்­காட்­டவே இந்த விட­யத்தை இங்கு தெரி­யப்­­படுத்­தி­னேன் – – என்­றார்.

வடக்கு மாகாண கல்வி அமைச்­சர் க.சர்­வேஸ்­வ­ரன், வடக்கு மாகாண ஆளு­நர் கல்வி தொடர்­பான சிறப்­புக் கலந்­து­ரை­யா­ட­லுக்கு ஏற்­பாடு செய்­தார். மாகாண கல்­வித் திணைக்­க­ளத்­தின் பணிப்­பா­ளரைக் கூட்­டத் துக்கு அழைத்­தார். இது தொடர்­பில் எனக்கு எது­வும் தெரி­யப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

மாகா­ணத்­துக்கு தெரி­யா­ம­லேயே அவர்­கள் விட­யங்­க­ளைக் கையாள்­கின்­றார்­கள் – – என்­றார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.