சிலாபம் பாடசாலை ஒன்றின் மாணவத் தலைவன் பலி!

சக மாணவர்களின் தாக்குதலுக்குள்ளாள சிலாபம் பிரதேச பாடசாலை ஒன்றின் தலைமை மாணவத் தலைவன் உயிரிழந்துள்ளார்.


குறித்த மாணவன் சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த மாணவன் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் கடந்த 15ம் திகதி இரவு மாணவன் மீது அதே பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் குழுவொன்றால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலில் காயமடைந்த மாணவன் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து சத்திரசிகிச்சை ஒன்றின் பின்னர் வீடு திரும்பிய மாணவனின் நிலை மோசமடைந்ததால் மீண்டும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தரம் 11ல் கல்வி பயிலும் 16 வயதுடைய குறித்த மாணவன் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

இதேவேளை மாணவன் மீது தாக்குதல் நடத்திய 15 வயதுடைய மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர், இரண்டு மாணவர்கள் நீதிமன்ற உத்தரவுப்படி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.பிரதான சந்தேகநபராக கருதப்படும் மாணவன் சீர்திருத்த நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார்.சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
Powered by Blogger.