பெண் கட்டளை அதிகாரியுடன் இலங்கை வந்த பிரெஞ்சுப் போர்க்கப்பல்!

பிரெஞ்சுக் கடற்படையின் இரண்டு போர்க்கப்பல்கள் இன்று காலை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தன. ஒரு நாள் பயணமாக மாத்திரம் கொழும்பு வந்துள்ள இந்தப் போர்க்கப்பல்கள் இன்று மாலை புறப்பட்டுச் செல்லவுள்ளன.


‘Dixmude’ மற்றும் ‘Surcouf’ ஆகிய பெயர்களைக் கொண்ட இந்தப் போர்க்கப்பல்களுக்கு சிறிலங்கா கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர்.இவற்றில், ‘Surcouf’ என்ற போர்க்கப்பலின் கட்டளை அதிகாரியான கொமாண்டர் கிரிஸ்ரின் றிப்பே ஒரு பெண்ணாவார். இவரே கொழும்பு துறைமுகத்துக்கு வந்த கடற்படைக் கப்பல் ஒன்றின் முதலாவது பெண் கட்டளை அதிகாரியாவார்.இவரை சிறிலங்கா கடற்படையின் பெண் அதிகாரிகள் வரவேற்றனர்.


No comments

Powered by Blogger.