இயக்குனர் கௌதமன் திடிர் கைது!

சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்துவதை எதிர்த்து நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட இயக்குநர் கவுதமன் இன்று
திடீரென கைது செய்யப்பட்டார். குறித்த போராட்டத்தில் பாரதிராஜா, சீமான், அமீர், கவுதமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் இன்று திருவல்லிக்கேணி போலீஸார் இயக்குநர் கவுதமனை திடீரென கைது செய்தனர். அவர் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அவரை தரதரவென போலீஸார் இழுத்து சென்றதாக அவரது மனைவி மல்லிகா கூறியுள்ளார். அவர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கைது செய்த போலீஸார் கவுதமனை திருவல்லிக்கேணி காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லவில்லை என்றும் கூறப்படுகிறது. 
Powered by Blogger.