யாழ். பல்கலையில் விவரணப்படத் திரையிடலுனான“கனலி”சஞ்சிகை வெளியீடு!

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் நடாத்திய ‘இருளென்பது குறைந்த ஒளி’ எனும் தொனிப்பொருளிலான ஒளிப்படக் கண்காட்சியும், விவரணப்படத் திரையிடலும், “கனலி” சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வும் நேற்று திங்கட்கிழமை யாழ் பல்கலைக்கழகத்தில் ஊடகக்கற்கை இணைப்பாளர் கலாநிதி சி.ரகுராம் தலைமையில் இடம்பெற்றது.


ஊடகக் கற்கை மாணவர்களால் எடுக்கப்பட்ட நூற்றுக்கும் அதிகமான புகைப்படங்கள் அடங்கிய இக் கண்காட்சியை ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பார்வையிட்டிருந்தனர். இயற்கை ஒளியை மட்டும் பயன்படுத்தி பதிவுசெய்யப்பட்ட இவ் ஒளிப்படங்கள் அனைத்தும் மக்களின் கலாசாரம், பண்பாடு, பொருளியல்,

தனிமனித வாழ்க்கை மற்றும் இயற்கைசார் இருப்புக்களை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தன. இந்நிகழ்வை கலைப் பீடாதிபதி கலாநிதி க. சுதாகர் ஆரம்பித்து வைத்தார்.  இந்நிகழ்வின் இரண்டாவது அம்சமாக ஊடகக் கற்கைகள் மாணவர்களால் கடந்த இரண்டு ஆண்டுகளாக  உருவாக்கப்பட்ட 24  விவரணப்படங்களுள் தெரிவு செய்யப்பட்ட 9

விவரணப்படங்கள் திரையிடப்பட்டன. இவ் விவரணப்படங்களில் யாழ்ப்பாணம் சர்வதேச திரைப்பட விழாவில் பார்வையாளருக்கான விருப்பு விருதை வென்ற முனை திரைப்படமும் உள்ளக்கப்பட்டிருந்தது. இவ் இரண்டு நிகழ்வுகளிலும் பெருமளவான பீடாதிபதிகள்இ பேராசியர்கள்

விரிவுரையாளர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் பாடசாலை மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.  இறுதியாக ஊடகக் கற்கைகள் இரண்டாம் வருட மாணவர்களின் “கனலி” சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது.

இச்சஞ்சிகையை பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர். இ. விக்னேஸ்வரன் வெளியிட்டுவைக்க கலைப் பீடாதிபதி கலாநிதி க.சுதாகர் பெற்றுக் கொண்டார். சஞ்சிகையின் நயப்புரையை தமிழ்த்துறைப் பேராசிரியர் கி.விசாகரூபன் ஆற்றினார்.

அதனைத் தொடர்ந்து சிரேஷ்ட ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை சர்வானந்தாவை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் உட்படப் பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.